பூமிக்கு அடியில் கடல்

 கதையல்ல.. நமது பூமிக்கு "கீழே" பெரிய கடல் ஒளிந்து உள்ளது.. வைரத்தை வைத்து ரூட் பிடித்த விஞ்ஞானிகள்!  போட்ஸ்வானா: பூமிக்கு அடியில் ஒரு மிகப்பெரிய ராட்சத பெருங்கடல் ஓடிக்கொண்டிருக்கிறது என நம் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். 

             சாதாரண பெருங்கடலை காட்டிலும் 6 மடங்கு பெரிதாக இருப்பதாக ஒரு வியப்பான தகவலும், இந்த ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. இதுவரை பாட்டி, தாத்தாக்கள் இப்படிக பல விஷயங்களைத் தூங்கும்போது கதைகளாகச் சொல்லிக் கேட்டு, இவையெல்லாம், கட்டுக்கதையென நினைத்திருந்த ஒரு விஷயம், உண்மையாகவே இருப்பதை அறிவியல் ஆராய்ச்சி நிரூபித்திருக்கிறது.!                                                         

            59 வருடங்களுக்குப் பிறகு பூமிக்கு அருகில் வந்தது AD பாதாள உலகம்… நம்மில் பெரும்பாலானோர் சிறு பிள்ளைகளாக இருந்தபோது அடிக்கடி பாதாள உலகம் தொடர்பான கதைகளை நம் தாத்தா, பாட்டி சொல்லிக் கேட்டிருப்போம். பல சிறுவர் இதழ்களிலும் இது மாதிரியான கதைகளைப் படித்திருப்போம். அதில் நம் பூமிக்கு அடியில் பாதாள உலகம் ஒன்று இருப்பதாகவும், அங்கு ஒரு பெரிய கடல் ஓடிக்கொண்டிருப்பதாகவும் கூறி ஒரு கதை கட்டமைக்கப்பட்டு இருக்கும். அந்தச் சமயத்தில், இம்மாதிரியான கதைகளை உண்மையென நாம் நம்பி இருப்போம். ஆனால் பெரியவர்களான பிறகு இவை அனைத்தும் கட்டுக்கதையென உணர்ந்திருப்போம். ஆனால் அந்தக் கட்டுக்கதை உண்மையெனத் தெரியவந்தால் எப்படி இருக்கும்?

              


                 

                    


 ஆம்., நம் பூமிக்கு அடியில் மிகப்பெரிய ராட்சதக் கடல் இருப்பதாகத் தற்போது விஞ்ஞானிகளே கண்டுபிடித்துள்ளனர். பெருங்கடலை காட்டிக்கொடுத்த வைரம் ஆப்பிரிக்காவின் தெற்கு பகுதியில் உள்ள போட்ஸ்வானா நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக அகழ்வாராய்ச்சி நடைபெற்று வருகிறது. அப்போது சில மாதங்களுக்கு முன்பு அங்குள்ள ஒரு பகுதியில் நடந்த அகழ்வாய்வில் ஒரு வைரம் கண்டெடுக்கப்பட்டது. 



                    இதுவரை கிடைக்கப்பெற்ற வைரங்களிலேயே இந்த வைரம் முற்றிலுமாக வேறுபட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து, இந்த வைரத்தை இயற்பியல் விஞ்ஞானிகளிடம் அகழ்வாராய்ச்சியாளர்கள் ஒப்படைத்தனர். இதனைப் பார்த்த விஞ்ஞானிகளும் வியப்படைந்தனர். ஏனெனில் இந்த வைரத்தின் அமைப்பே வித்தியாசமாக இருந்துள்ளது. பின்னர், வேதியியல் விஞ்ஞானிகளுடன் இணைந்து அவர்கள் அந்த வைரத்தை ஆராய்ச்சி செய்தனர். ஆடிப்போன விஞ்ஞானிகள் இந்த வைரத்தைக் கூறாய்வு செய்தபோது, அதில் இருந்த சில பொருட்கள் விஞ்ஞானிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. 



                    அந்த வைரத்தில் 'ரிங்வூட்டி' என்ற ஒரு வகை கனிமங்களும் (மினரல்), கடல் நீரின் படிமங்களும் நிறைய இருந்ததுதான் விஞ்ஞானிகளின் ஆச்சரியத்துக்குக் காரணம். ஏனெனில், இந்த ரிங்வூட்டி கனிமங்கள் பூமிக்கு அடியில் சுமார் 660 கி.மீ.க்கு அப்பால் உள்ள இடத்தில் இருப்பவை ஆகும். அதாவது, பூமியின் மேல் அடுக்குக்கும், கடைசி அடுக்குக்கும் இடைப்பட்ட இடத்தில் இருக்கும் இடம் அது. இதுவரை அந்தப் பகுதியை ஒரு வெற்றிடம் என்றே விஞ்ஞானிகள் கருதி வந்தனர். ஆனால் அந்த இடத்தில் கிடைக்கப்பெற்ற வைரத்தில் கடல் நீர் இருந்ததை பார்த்து விஞ்ஞானிகள் ஆச்சரியத்தில் ஆடிப் போய்விட்டனர்.


                     பூமிக்கு அடியில் பெருங்கடல் இதன் தொடர்ச்சியாக, மேலும் பல ஆய்வுகளை மேற்கொண்ட விஞ்ஞானிகள், பூமிக்கு அடியில் ஒரு பெரிய கடல் இருப்பதை உறுதி செய்தனர். அதுவும் அது சாதாரண கடல் அல்ல. பெருங்கடல் கூட அல்ல. மிகப்பெரிய ராட்சதக் கடல். அதாவது ஒரு பெருங்கடலை போல 6 மடங்கு இது பெரியது என்றால் யோசித்து பாருங்கள். அது எவ்வளவு பெரிதாக இருக்கும் என்று. இருந்தபோதிலும், விஞ்ஞானிகளின் இந்த ஆராய்ச்சி ஒரு தியரியாகவே (அறிவியல் கூற்று) உள்ளது. இதுகுறித்து மேலும் ஆராய்ச்சி செய்ய வேண்டும் என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.


                 பல நூற்றாண்டுகளுக்கு முன்பே ஜூலேஸ் வெர்னஸ் என்ற விஞ்ஞானி பூமிக்கு அடியில் ஒரு கடல் இருப்பதாகத் தனது ஆராய்ச்சி புத்தகத்தில் எழுதி இருந்தார். ஆனால் தற்கால விஞ்ஞானிகள் அதை ஏற்காமல் இருந்தனர். ஆனால் தற்போது கிடைத்துள்ள வைரத்தை ஆராய்ச்சி செய்ததில் அது உண்மையெனத் தெரியவந்துள்ளது. மிகப் பெரிய பிரம்மாண்ட கடலுக்கு மேல் தான் நாம் வாழ்ந்துக் கொண்டிருக்கிறோமா? நினைத்தாலே உடல் சிலிர்க்கிறது அல்லவா....



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url