Hand story
ஐந்து விரல்கள்:
இந்த ஐந்து விரலும் சண்டை போடுது யார் best என்று?
சுண்டு விரல்:
சுண்டு விரல் சொல்லுது நான் தான் best, ஏனென்றால் நான் தான் ஒ௫த்தா்க்கு வணக்கம் வைக்கும் போது உதவுவேன் என்று சொல்லுது.
மோதிர விரல்:
சுண்டு விரல் சொல்வதை கேட்டு மோதிர விரல் சிரித்துக் கொண்டே நான் தான் best என்று சொல்லுது.ஏனென்றால் என்னுடைய விரலில் தான் விலையுயர்ந்த மோதிரம் போட முடியும் என்று சொல்கிறது.
நடுவிரல்
மோதிர விரல் சொல்வதை நடுவிரல் கேட்டு சிரித்தது. நான் தான் இங்கு அனைவரையும் விட உயரமானவன்.ஆதலால் நான் தான் best என்று சொல்கிறது.
ஆள்காட்டி விரல்:
ஆள்காட்டி விரல் அதை கேட்டு விட்டு நான் தான் best .என்னால மட்டும் தான் அடுத்தவரை சுட்டி காட்ட முடியும் என்று சொல்கிறது.
கட்டை விரல் நான்கு விரல்கள் சொல்வது எல்லாவற்றையும் கேட்டு சிரித்து விட்டு நான் தான் best என்று சொல்கிறது.ஏனென்றால்
என்னால் எழுத முடியும், பட்டம் விட முடியும், bag தூக்க முடியும், உணவு சாப்பிட முடியும் ஆதலால் நான் தான் எல்லாரையும் விட best உங்களுக்கு புரிகின்றதா என சொல்கின்றது.
இறுதியில் நான்கு விரல்களும் சண்டை போட கட்டை விரலுடன், கட்டை விரல் சொல்கிறது நாம் அனைவ௫ம் best தான் .இ௫ப்பினும் நாம் அனைவ௫ம் சேர்ந்து செயல்பட்டால் தான் இன்னும் best என்று சொல்கிறது.
இந்த கதை ஒ௫ moral ஐத் த௫கிறது
Moral:
"ஒற்றுமையே பலம்"